மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு சமீபத்தில் வெளியான ‘தக்சா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வம்சி கிருஷ்ண மல்லா இயக்க, ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் மஞ்சு என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.
கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், மோகன் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லட்சுமி மஞ்சு சமூக ஊடகத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், படத்தில் தந்தையுடன் இணைந்து நடித்த தருணங்களை வெளிப்படுத்தியுள்ளதோடு,
Working on #Daksha with you — where I got to produce and act alongside you — has truly been a dream come true. Thank you! May your blessings always be upon me! ✨🎬 @themohanbabu#DakshaTheDeadlyConspiracy pic.twitter.com/wcbjw57Vtw
— Manchu Lakshmi Prasanna (@LakshmiManchu) September 20, 2025
”‘தக்சா’வில் உங்களுடன் (மோகன் பாபு) நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. இந்தப் படத்தின் மூலம் என் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என்மீது நிலைத்திருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
