பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்திலும் நடித்துள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் இனிய சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் காந்தாரா சாப்டர்–1 படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். மேலும், யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதைப் பற்றி ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்:
“என்னை நடிகையாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். காந்தாரா படம் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. என் நடிப்பைப் பார்த்து ரிஷப் ஷெட்டி ‘அற்புதம்’ என்று பாராட்டியது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. ரசிகர்கள் அளிக்கும் அன்பினால் என் மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் உள்ளது. இந்த அன்பு என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.
