மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலில்ன் மகன் பிரணவ் மோகன்லால். இவர் தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகி வரும் டைஸ் ஐரே படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கி மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்து கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிரம்மயுகம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் A சான்றிதழ் வழங்கியுள்ளது. திகில் திரில்லராக உருவகியுள்ள இப்படம் ஹாலோவின் தினத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
