தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குனர் மற்றும் திறமையான குணச்சித்திர நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ், மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் தர்புகா சிவா.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்றுள்ளது. வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், 5 விதமான பாணியில் படம் குறித்து பேசும் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில், ருத்ராவுடன் அருகில் அமர்ந்துள்ள விஷ்ணு விஷால்,
“பரவாயில்ல, என்னைவிட நல்லாவே நடிக்கற”
என்று சொல்லும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.