தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்துறை திறமையால் பிரபலமான ராகவா லாரன்ஸ், தனது உதவி மனப்பான்மைக்காகவும் அறியப்படுகிறார். தற்போது, சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்பனை செய்து வருகிற 80 வயது முதிய தம்பதி குறித்து அறிந்து, அவர்களுக்கு நிதி உதவி செய்யத் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,


“சென்னையில் 80 வயது முதியவர் மற்றும் அவருடைய மனைவி சேர்ந்து இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்கிறார்கள் என்பதை இணையத்தில் பார்த்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.”


என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்