இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் முன்னணி நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய ரொமான்டிக் திரைப்படம் மெண்டல் மனதில் உருவாகி வருகிறது
இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் சமீபத்தில் பகிர்ந்த தகவல் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது
இப்படத்தில் ஜீவிக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
படத்தின் ஒளிப்பதிவை அருண் ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்,இசையமைப்பு ஜீவி பிரகாஷ் குமார்,படத்தொகுப்பு பாலாஜி,கலை இயக்கம் ஆர் கே விஜய் முருகன்,எக்சிக்யூட்டிவ் புரொட்யூசர் தினேஷ் குணா.
இந்த திரைப்படத்தை Parallel Universe Pictures நிறுவனம் சார்பில் ஜீவி பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்
முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன போன்ற வெவ்வேறு வகை படங்களில் மாஸ்டர் ஆல்பங்களை வழங்கிய செல்வராகவன் ஜீவி பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது
படப்பிடிப்பு புகைப்படத்துடன் ஜீவி பிரகாஷ் தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்
ஜீனியஸ் ஒன் அண்ட் ஒன்லி செல்வராகவன் சாருடன் ஷூட்டிங்கில் இருக்கிறேன் மெண்டல் மனதில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
இப்படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது நான்காவது கட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டீசர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன
