தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவரை மையமாக கொண்டு வெளியான “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது.
இந்நிலையில், சிவப்பு நிற சேலை அணிந்து அழகாக நடைபோடும் தன்னுடைய வீடியோவை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
