google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம்

ஒரு படம் சொல்ல வருகிற கருத்தை சரியாகவும், சுவாரஸ்யமாகவும், தேவையற்ற இடைச்செருகல்கள் இல்லாமலும் எடுத்துச் சொன்னால், அது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால், அந்தப் படம் மக்களிடம் சென்று சேரும் — இதுதான் முதல் படி.

இந்த படம் கதையையே நாயகனாகக் கொண்ட ஒரு படைப்பு.

சிக்கல் இல்லாத, எளிய கதை.
அதை குறைந்த நேரத்தில் சுறுசுறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குநர்.

படம் நடைபெறும் களம் பெரும்பாலும் ஒரே இடம்தான்.
அதுவும் தொடர்ச்சியாக பகலும் இரவும் நடைபெறும் கதை.

மனிதர்களின் தவறான கருத்துகள், அடுத்தவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும், போலி நபர்கள் தெய்வத்தை எவ்வாறு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்பதும், மற்றவர்களின் வாழ்வில் மூன்றாம் மனிதர்கள் தலையீடு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் மையமாகக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நல்வாய்ப்பாக, இந்த படம் ஒரு #FeelGoodMovie ஆக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

படத்தில் சிலரே தெரிந்த முகங்கள் —
ஜீவா, தம்பி ராமையா, இளவரசு போன்றோர்.

ஜீவாவின் அடுத்த இன்னிங்ஸ் என இந்தப் படத்தை சொல்லலாம்.
எந்தப் பேத்தல் வசனங்களும் இல்லாமல், ஹீரோயிசம் முயற்சிகளும் இல்லாமல், கதை கேட்பதை இயல்பாக இவர் மூலம் இயக்குநர் பெற்றுள்ளார்.
உங்கள் நடிப்பு இயல்பாக வருகிறது; அதை கலப்படம் இல்லாமல் செய்துள்ளீர்கள். இப்படியே தொடருங்கள்.

தம்பி ராமையா — முக்கியமான பாத்திரம்.
ஈகோவை வெளிப்படுத்த தமிழ் சினிமா உங்களை அடிக்கடி பயன்படுத்துகிறது. இருந்தாலும், ஒரே மாதிரியாக இருப்பது ஒரு பலவீனம். உடல் மொழி மற்றும் நடிப்பு பாணியிலாவது மாற்றம் செய்வது நலம்.

இளவரசு —
வழக்கமான பாத்திரம், வழக்கமான நடிப்பு.
இவர் செய்த தவறே இந்தப் படத்தின் காரணம்; அதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில், “மலையாளத்தில் அடிக்கடி வரும் இப்படியான படங்களை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள், அவர்களுக்கு மசாலா தான் வேண்டும்” என்ற எண்ணம் தவறு என்பதைக் காட்டும் ஒரு முயற்சி இது.

இது இந்தியா முழுவதுக்கும் பொருந்தும் கதை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்