முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்!

1997ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் தான் சேரன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இதில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாரதி கண்ணம்மாவை தொடங்கி, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோஃகிராப், தவமாய் தவமிருந்து என பல சிறந்த ஃபீல்-குட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி, பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது முதல் படத்தின் தயாரிப்பு காலத்தில் நடந்த சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது:
“பாரதி கண்ணம்மா படத்தில் எனது பெயர் இல்லாமல் வெளியிட தயாரிப்பாளர் ஹென்றி முடிவு செய்துவிட்டார். அதற்கு காரணம் என் பிடிவாதமும் கோபமும் தான். அவர் கூறியவற்றை கேட்காமல் விட்டதனால், வெளியே பல தவறான தகவல்கள் பரவின. குறிப்பாக, ‘இது பார்த்திபன் படம்’, ‘க்ளைமேக்ஸ் பார்த்திபன் மாற்றினார்’, ‘இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை’ என்ற வதந்திகள் அதிகம் பரவின.

அந்த நேரத்தில் எனக்குள் ஒரு பெரிய வருத்தம் இருந்தது. ‘எனக்கு வாழ்க்கையை கொடுத்து, அதையே நீங்கள் பறித்துக் கொண்டீர்கள்’ என்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் அவருடன் நான் பேசவே இல்லை. ஆனால் பின், பெப்ஸி மற்றும் ஆர்சி சக்தி தலையிட்டு, ஒரு இயக்குநர் பெயர் இல்லாமல் படம் வரக்கூடாது என்று உறுதி செய்ததால், என் பெயர் சேர்க்கப்பட்டது.

அதேபோல், படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து பார்த்திபன் சார் உடன் பெரிய விவாதமும் ஏற்பட்டது. ஆனால் பின்னர் எங்கள் உறவு சரியாகி, இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவரைவிட நான் எப்போதும் இளையவர், அவர் என்னைவிட முன்பே இயக்குநராகி, சிறந்த சாதனைகள் செய்தவர். எனது முதல் படத்தில் அவரின் ஒத்துழைப்பு மிகுந்தது. என் தவறுகளை சுட்டிக்காட்ட அவருக்கு முழு உரிமையும் உள்ளது.”

மேலும் அவர் கூறியதாவது:
“பாரதி கண்ணம்மா படத்தில் முரளி சார் நடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தோம். அவர் கதையை கேட்டுப் பிடித்து, நடிக்கவும் தயார் ஆனார். ஆனால் அப்போது அவருக்கு சந்தை இல்லை என்பதால், பார்த்திபன் சார் நடித்தார். அதன் பிறகு, என் இரண்டாவது படமான பொற்காலம்-இல் முரளி சார் ஹீரோவாக நடித்தார்,” என சேரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்