மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள பைசன் திரைப்படம், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளி சிறப்பாக அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள முதல் பாடல் தீக்கொளுத்தி, இரண்டாவது பாடல் றெக்க றெக்க மற்றும் மூன்றாவது பாடல் சீனிக்கல்லு ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
பரணி ஆறு பாயும் பூமி… 2 Million hearts touched! 🐃✨ #Thennadu
— Think Music (@thinkmusicindia) October 3, 2025
▶️ https://t.co/eqKC07gp7G#BisonKaalamaadan🦬 💥 #BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere… pic.twitter.com/fGa7aTA7OF
இந்நிலையில், சமீபத்தில் பைசன் படத்தின் புதிய பாடல் “தென்நாடு” வெளியிடப்பட்டுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில், மாரி செல்வராஜ் வரிகளை எழுதி, பாடகர் சத்யன் தனது குரலில் இப்பாடலைப் பாடியுள்ளார். இது 2 மில்லியன் பார்வையாளார்களை கவர்ந்துள்ளது.
