தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக திகழ்கிறார் நடிகை திரிஷா. தனது அழகும் நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களை வருடாண்டுகளாக கவர்ந்திழுத்து வருகிறார்.
42 வயதான நிலையிலும் திருமணம் செய்யாத திரிஷா குறித்து, “அவர் யாரை திருமணம் செய்கிறார்?”, “எப்போது திருமணம்?” என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில், இன்று காலை முதல் “திரிஷா விரைவில் ஆஸ்திரேலிய தொழில் அதிபரை திருமணம் செய்யப் போகிறார்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த தொழில் அதிபர் சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும், தற்போது ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து திரிஷாவின் தாயாரிடம் கேள்வி எழுப்பியபோது, “இத்தகைய செய்திகள் அடிக்கடி வருகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. திருமணம் நடந்தால் நாங்களும் மகிழ்ச்சியாக இருப்போம்” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
