இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் வைரலான கூமாப்பட்டி தங்கபாண்டியன், தனது ஊரின் சிறப்புகளை பரப்பி, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தார். “மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க…” என்ற அவரது வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதனால் கூமாப்பட்டி என்ற சிறிய கிராமம் இணையத்தில் டிரெண்ட் ஆனது. பின்னர், பொதுப்பணித்துறை கூமாப்பட்டி பிளவக்கல் அணைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த புகழால் தங்கபாண்டியன் பல டிவி நிகழ்ச்சிகளில், குறிப்பாக ஜீ தமிழிலும் பங்கேற்று, இன்ஃப்ளூயன்சராகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்தபோது கதவு மோதியதில் தங்கபாண்டியனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்ததாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
