சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கி வரும் 25-வது படமான பராசக்தியை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
Wishing our @iam_RaviMohan a fantastic birthday from the team of #Parasakthi ♥️🔥 pic.twitter.com/33OW8XFncY
— DawnPictures (@DawnPicturesOff) September 10, 2025
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, நாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகிறார். இப்படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் அமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரவி மோகனுக்கு, ‘பராசக்தி’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Look for the quietest spot on sets and u will find Ravi over there, preparing, unruffled, and 200 percent into the character and the scene! Soo enjoying working with you, my beautiful gentleman actor !! Happy happy birthday and may you have the best times ahead @iam_RaviMohan 🫶 pic.twitter.com/4lEgY5HTHv
— Sudha Kongara (@Sudha_Kongara) September 10, 2025
அதோடு, இயக்குநர் சுதா கொங்கராவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கான பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
