lokah

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’?

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோகா’. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். குறிப்பாக சாண்டியின் வில்லன் கதாபாத்திரம் படத்திற்கு தனித்துவமான சாயலை வழங்கியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி, படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெற்றியடைந்த பின்னர், கடந்த 5ஆம் தேதி படம் இந்தியில் வெளியானது.

ஆனால் நான்கு நாட்களில் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதற்குக் காரணமாக, ‘பாகி 4’, ‘பரம் சுந்தரி’ போன்ற பெரிய படங்கள் அப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததே என சொல்லப்படுகிறது.

எனினும், உலகளவில் இந்த படம் இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top