தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், பின்னர் ராஜா ராணி 2யிலும் நடித்தார்.
அதன் பின் சன் டிவியில் இனியா தொடரில் நடித்தார். அதன்பின் அவர் எந்த தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தற்போது, ஜீ தமிழில் சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ள பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசா நடித்துவருகிறார். இதில் அவர், காது கேட்காத பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளர் நாராயணனுடன் எடுத்த புகைப்படத்தை ஆல்யா பகிர்ந்து, உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் வாழ்நாளில் என்றும் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய புகைப்படம் இது. நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கொண்ட கதாபாத்திரத்துக்காக என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணனுக்கு என் மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
