அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளர்-நடிகர் வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை, ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார். பரத் ஆசிவகன் இசையமைப்பில், சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
✨ Super excited to unveil the teaser of my next film #TheeyavarKulaiNadunga 🔥 Thrills & chills guaranteed – can’t wait for you all to watch it!#TKN Teaser: https://t.co/hf8CHS3HoG@akarjunofficial @off_dir_Dinesh @BA_THE_MUSIC @gsartsoffl @logu_npks @praveenraja0505… pic.twitter.com/Ope8QvVxu5
— aishwarya rajesh (@aishu_dil) September 19, 2025
படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. தற்போது, படக்குழு டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
