படத்தின் தொடக்கத்தில் ஒரு பழங்குடி பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையே கதாநாயகன் விஜய் ஆண்டனி. வருடங்கள் கடந்து 2025-இல் கதை நகர்கிறது.
விஜய் ஆண்டனி பல வீடுகளில் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தவர். தற்போது செக்ரட்டரி ஆபிஸில் சிறிய வேலை செய்யும் நிலையிலிருந்து, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.
தமிழக அரசியல், அரசு அலுவல்கள்—எது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பில் முடித்து, கமிஷன் வசூலிக்கும் சிஸ்டத்தை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். டிரான்ஸ்ஃபர், கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்குவது—இவர் செய்ய முடியாதது எதுவுமில்லை. இப்படியாக ரூ.6000 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்.
ஆனால், ஒரு மத்திய அமைச்சருக்கான வேலையில் சிக்கியபோது, முன்பு உதவியவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட, அனைத்துத் தரப்பினரும் அவரை எதிர்க்கிறார்கள். இந்த சிக்கலிலிருந்து விஜய் ஆண்டனி எப்படித் தப்புகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு
விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களில் போலவே, இக்கதாப்பாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக நடித்த வாகை சந்திரசேகர், தன் மிடுக்கான தோற்றத்தால் தாக்கம் செலுத்துகிறார்.
இயக்கம்
முதல் பாதி வேகமான திரைக்கதையால் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. ஒரு மீடியட்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களால் கூட முடியாத விஷயங்களை முடித்து வைப்பதை காட்டிய விதம் பாராட்டத்தக்கது. ஆனால், இரண்டாம் பாதியில் பல இடங்களில் லாஜிக் குறைவுகள் மற்றும் அதிக வசனங்கள் காரணமாக சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவு
ஷெல்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இசை
விஜய் ஆண்டனியின் இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு பலம் சேர்க்கிறது.
தயாரிப்பு
இப்படத்தை Vijay Antony Film Corporation நிறுவனம் தயாரித்துள்ளது.
