விழி அசைவிலும், உதட்டு சுழிப்பிலும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் ஸ்மிதா நினைவு நாள்!

விஜயலட்சுமியாக ஆந்திராவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்க்கை முழுவதும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த சில்க் ஸ்மிதா இவ்வுலகை விட்டு பிரிந்து 28 வருடங்கள் ஆகிறது.

நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் வண்டி சக்கரம் படத்தில் அறிமுகமான சில்க் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி வெறும் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். துணை நடிகையாகவும் ட்ரூப் டான்ஸராகவும் களமிறங்கிய சில்க் ஸ்மிதா தனது காந்த பார்வை மற்றும் வசீகரமான நடிப்பால் லீடிங் நடிகையாகவும் ஹீரோயினாகவும் மாறினார்.

ஒரு சூழலில் சில்க் இல்லாத சினிமாவே இல்லை என்கிற நிலைக்கு உச்சத்துக்கு வந்தபோது 35 வயதிலேயே அவர் திடீரென மறைவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், சில்க் ஸ்மிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் 29 வருசங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அவரது புகழ் அப்படியே மறையாமல் இருக்கிறது. அதுதான் சில்க்.

தமிழில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியது மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியும் நல்ல ரோல்களில் நடித்தும் உள்ளார் சில்க் ஸ்மிதா. தனக்கென தனி இடத்தை உருவாக்கி, கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக்குள் வந்தார் பாபு. அவரின் வீட்டில் தான் சில்க் ஸ்மிதாவின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. மர்ம முடிச்சு அவிழாத சில்கின் மரணம் இன்றும் மர்மமாக இருப்பதே பெரும் வேதனையாகவுள்ளதாக பலரும் கருதுறாய்ங்க.

பலரின் கனவு கன்னியா திகழ்ந்த சில்க் ஸ்மிதா மனைவி இன்றி குழந்தைகளோடு வாழ்ந்து வந்த பாபுவுடன் இணைந்து வசித்து வந்தார். பாபுவின் பேத்தியுடனே தினமும் தூங்கி கொண்டிருந்த சில்க் ஸ்மிதா ஒரு நாள் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 23ஆம் தேதி காலை திரையுலகினருக்கு மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்களுக்கு பேரிடியாய் விழுந்தது சில்க் ஸ்மிதாவின் இறப்பு செய்தி. பிரேத பரிசோதனை அறிக்கையும் தற்கொலை என்பதை உறுதிப்படுத்தின. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை கூற அவருக்கான நெருங்கி நண்பர்கள் இல்லாதது இன்னும் சில்க் ஸ்மிதாவின் மரணம் மர்மமாகவே நீடிக்க காரணமாக உள்ளது.

உயிரிழந்த சில்க் ஸ்மிதாவின் படுக்கையறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் பாபு தன்னை திருமணம் செய்து கொள்ளாததால் நிம்மதி இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பின் நாளில் விசாரணையில், பாபு சில்க் ஸ்மிதா தான் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறியிருந்தார். கடைசி வரைக்கும் இவரது மரணத்தின் மர்ம முடிச்சி அவிழவே இல்லை. ஆனாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் ஒரு ஓரமாக வாழ்ந்து வருகிறார் சில்க் என்பதில் எந்த ஐயமும் இல்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்