வயது 24 தான்… ஆனாலும் சொத்து மதிப்பு ரூ.250 கோடி!
பாலிவுட் டி.வி. தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். அதோடு ‘பியர் பேக்டர்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர், காமெடி-சமையல் நிகழ்ச்சிகளில் எபிசோடுக்கு ரூ.2 லட்சம், மேலும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார்.
நடிப்பு மட்டும் அல்லாமல், ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித் துறையிலும் முதலீடு செய்து வெற்றிகரமான தொழில் அதிபராகவும் திகழ்கிறார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.
