‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ருக்மிணி வசந்த், தானே நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அப்போது பேசிய அவர்,
“காந்தாரா சாப்டர் 1-ல் நடிக்க வாய்ப்பளித்த ரிஷப் ஷெட்டி சார் அவர்களுக்கு என் நன்றி. இந்த படம் என்னை நடிகையாக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மாற்றியது.
‘சப்த சாகரலு தாதி – சைட் ஏ’ படத்தின் பிரீமியரின்போது, நீங்கள் என் நடிப்பை பாராட்டியது எனக்கு இன்னும் மறக்க முடியாத நினைவு. அது உணர்ச்சிவசமான தருணமாக இருந்தது,” என்றார்.
கர்நாடகாவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த கன்னட படம் ‘காந்தாரா’. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், 30 நாடுகளில் இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
