தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்!

‘இட்லி கடை’ படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் கைவசம் ‘தேரே இஷ்க் மே, கலாம், வடசென்னை 2’, இயக்குநர் விக்னேஷ் ராஜா படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என எட்டு படங்கள் இருக்கிறது.

இதில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘D54’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சூரஜ் வெஞ்சரமூடு, கருணாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதனை ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்