டூட்

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’!

தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ திரைப்படம், படக்குழுவின் புதிய முடிவின் பேரில் டிசம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிராக பாய்ந்தால், அது பேராபத்தாக முடியும்.
இதேபோல், ஒரே திருவிழாவில் இரண்டு பெரிய படங்கள் மோதுவது, இரண்டிற்குமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதனால், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்’ படத்துக்கு மரியாதையாக வழிவிடுகிறோம்.
எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கட்டும் என மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘டூட்’ படத்தின் வெளியீட்டை மாற்றுமாறு மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் பலனளிக்காததால், தற்போது திரைப்படத்துறையும், திரையரங்குகளும் எதிர்கொள்ளும் சூழலை கருத்தில் கொண்டு, இரு படங்களின் வசூலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எங்கள் வெளியீட்டை மாற்ற தீர்மானித்துள்ளோம்.

அன்பும் மரியாதையும் குறியீடாக, ‘LIK’ திரைப்படம் 2025 டிசம்பர் 18, வியாழக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகும்.”

என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top