பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும்.

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில் மோதவிருக்கின்றன. இதனுடன் நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை, சமுத்திரகனியின் கார்மேனி செல்வன் படங்களும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (அக்டோபர் 14) சென்னைையில் நடைபெற்றது. அதில் நடிகை அதுல்யா ரவி, தீனா, தங்கதுரை, இயக்குநர் சண்முகம் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:

“தீபாவளி ரேஸ்ல டீசல் வர்றதுக்குக் காரணம் என்னனு எல்லோரும் கேக்குறாங்க. ஒவ்வொரு படத்துக்கும் அதன் டெஸ்டினி இருக்கும். அந்த டெஸ்டினி தான் எங்கு நம்மை கொண்டு போகணுமோ, அங்கேயே சேர்க்கும். நம்ம படம் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிச்சு, இன்னொரு பட்ஜெட்டுக்கு வந்தது போல, அதே மாதிரி பல விஷயங்கள் நம்ம கையில் இல்லாம நடந்துச்சு.

யாராவது போட்டியா நினைச்சா போட்டி தான், இல்லன்னா பிரச்சனை இல்ல. வரும் அக்டோபர் 17 அன்று படம் ரிலீஸ் ஆகுது. ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன். என் மீதான அன்பும் ஆதரவும் எப்போதுமே இருந்தது, அது தொடர்ந்து இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு.

நான் எப்போதும் நல்ல கதைகளில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கணும் என்பதுதான் என் ஆசை. அதுக்கான இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நிச்சயமாக வருவார்கள். ஒரே ஒரு விஷயம் தான் – முயற்சி! முயற்சி எப்போதும் பலன் தரும். சில நேரங்களில் தோல்வி, சில நேரங்களில் வெற்றி வந்தாலும் முயற்சி எடுத்தவன் ஒருநாள் வெற்றியை அடைவான்.”

அதுல்யாவைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்:

“அதுல்யா ரவி இந்தப் படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கடலுக்குள்ள ஷூட்டிங் பண்ணும்போது காலை 7 மணிக்கு போனால், திரும்பி வர 3–4 மணி ஆகும். அந்த மாதிரி நேரத்துல பெண்களுக்குக் கஷ்டம் அதிகம் இருக்கும். ஆனா அவங்க எந்தக் குறையும் சொல்லாம ரொம்ப சப்போர்ட்டிவா நடிச்சாங்க.”

படக்குழுவை பாராட்டிய அவர் மேலும் கூறினார்:

“நான் கொஞ்சம் டென்ஷனாவே இருப்பேன். ஆனா தீனா, தங்கதுரை மாதிரி கூட்டணிகள் ஜாலியா பேசிக் கொண்டே மனநிலையை மாற்றிடுவாங்க. இயக்குநர் சண்முகம் முத்துசாமி கடைசி நிமிடத்திலும் திரைக்கதையிலேயே மூழ்கியிருப்பார். டயலாக்க் ஷீட் கொடுத்த பிறகும் மறுநாள் புதிய சீன்கள் எழுதுவார். அந்த அளவுக்கு அவர் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். அந்த அயராத உழைப்புக்கு நிச்சயம் பாராட்டு கிடைக்கும்.”

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் பேசி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்