டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்ஷன்ல சக்தி பிலிம் பேக்டரி புரொடக்ஸன்ல வந்த படம் மனிதன் தெய்வமாகலாம். செல்வராகவன் ஹீரோ. குஷூ ரவி ஹிரோயின். மைம் கோபி வில்லன். வில்லன் மாமனார் Y.G.
படம் போலிஸ் ஸ்டேஸன்ல ஆரம்பிக்குது. நியாத்துக்காக கொல பண்ணவன் தண்டனைய அனுபவிக்கிறான். சுயநலத்துக்காக கொல பண்ணவன் வெளிய சுத்துறான்னு செல்வா பண்ண கொலைய நியாயபடுத்தும் விதமா ஆரம்பிச்சி போகும் படம் கதைக்குள்ள!
செல்வா வுக்கு யாரும் கிடையாது. பக்கத்துல இருக்குற சித்தப்பா சித்திதான் எல்லாமே (சித்தி யார் தெரியுமா?) செல்வாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அப்புறம் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிராங்க. அதுக்கு வட்டிக்கு (ஹோட்டல் தொடங்க) செல்வா சித்தி வில்லன்ட்ட 50000 கடன் வாங்குறாங்க.
அந்த வட்டிய கட்ட தாமதாகுறப்ப அந்த சித்திய படுக்க கூப்டுறான் வில்லன். இத ஹூரோயின்ட்ட சொல்ல! அவ புருஷன்ட்ட 50000 வாங்கி செட்டில்பண்ண போன இடத்துல ஹூரோயின நாசம் பண்ணிடறான் வில்லன். இத பொறுக்கமுடியாம ஹூரோயின் செத்துடறாங்க.
அதே போல் இன்னொரு பிரச்சனை அந்த கிராமத்துல சரியான சாலை வசதி & தெருவிளக்கு எரியாமை னு அடிப்படை பிரச்சனை அதிகமா இருக்கும். ஊர்ல ஒரே ஒரு பெரிசு மட்டும் அந்த பிரச்சனைக்காக மனு கொடுக்க நடையா நடக்கும். மனுவும் கொடுத்து சேன்சன் ஆயிடும். அமைச்சரோட மாப்பிள்ளை (அதான் வில்லன்) வாயில போட்ருவார் பணத்தை.
ஆண படைச்சதோட நோக்கம், பெண்கள் மன வலிமையோட இருந்தாலும் , உடல் வலிமை கிடையாது அதுனால பெண்ணுக்கு பாதுகாப்பா ஒரு ஆண் இருப்பான்னு பார்த்தா, பெண்ணோட வீக்னஸ் தெரிஞ்சிக்கிட்டு பணத்த கொடுத்துட்டு , கொடுக்க முடியாத சூழ்நிலை வந்தா படுத்து கழிக்க சொல்ற வில்லனா மைம் கோபி நடிப்பு கன கச்சிதம்.
செல்வா சார் நீங்க நடிப்ப இன்னும் கொஞ்சம் மெருகேத்தனும். கிளைமாக்ஸ் அரக்கத்தனமான நடிப்பு சூப்பர். மற்றபடி ஒட்டவில்லை. குஷி ரவி அவரும் அருமையாகவே நடித்துள்ளார். பாடல் சுமார்.
அந்த சித்தி நடிகை ஒரு காலத்தில் தவெக தலைவரோட பட ஹூரோயின் முரளி, கார்த்தி, பிரசாந்த் இவர்களோடயும் ஹூரோயினா நடிச்சவங்க. அடையாளம் தெரியாத அளவுக்கு ஒரு கேரக்டர்.
அந்த சித்தி ஹூரோயின் பேர் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க பேமிலிஸ்
