biker1 1771824240

#BIKER தந்தை மீது இருந்த களங்கத்தை போக்கினரா மகன்!

விகாஸ் நாராயண் Motocart நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். முன்னாள் Motocross ரேஸ்ஸராக இருந்த விகாஸ் தற்போது காதல் மனைவி அனன்யா பள்ளியில் படித்து வரும் மகன் இஷான் என்று வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். தந்தை சுனில் நாராயணனை விட்டு விகாஸ் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் பள்ளியில் தனது தந்தையை தவறாக பேசிய சக மாணவனை இஷான் அடித்து விடுகிறான். இதை அறிந்த விகாஸ் இஷானை அழைத்து விசாரிக்கிறார். அடிப்பதை விட மற்றொரு முறை அவ்வாறு பேச நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று இஷானுக்கு அறிவுரை வழங்குகிறார்.

அந்த நேரம் விகாஸ் நாராயண் தந்தை சுனில் நாராயண் தான் பணி புரியும் ING நிறுவனத்தை மோசடி செய்து விட்டதாக கூறி அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். மீடியாவிலும் இது பற்றி செய்திகளை அந்த நிறுவனம் ஒளிபரப்பி அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த செய்தியை அறிந்த விகாஸ் தன் தந்தையின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கவும் அவரது மானத்தை காப்பாற்றவும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில் நடக்க இருக்கும் Motocross ரேஸில் கலந்து கொள்ள முடிவு செய்கிறார்.

எந்த ரேஸ்ஸை தந்தையை மீறிக் குடும்பத்திற்காக விலகினாரோ தற்போது அதே ரேஸில் பங்கு பெற குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பங்கு கொள்ள தந்தை இருக்கும் இடத்திற்கு விகாஸ் செல்கிறார்.

ஜெர்மனியில் நடக்க இருக்கும் அந்த ரேஸில் விகாஸ் வெற்றி பெற்றாரா தந்தை மீது இருந்த களங்கத்தை போக்கினரா மகன் மேல் கோபத்தில் இருந்த சுனில் அவரை ஏற்றுக் கொண்டாரா விகாஸ் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.

விகாஸ்ஸாக சர்வானந்த் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தில் அவர் காட்டியுள்ள உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது முகபாவனைகள் சிறப்பாக உள்ளது. Angry Man பட்டம் உங்களுக்கு மட்டும் இல்ல என்று பேசும் காட்சியில் கவனிக்க வைக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சர்வானந்தின் நடிப்பு அருமையாக இருக்கிறது.

சுனில் நாராயண்ணாக ராஜசேகர் அமைதியாக வந்தாலும் அழுத்தமாக நடித்திருக்கிறார். Sponsor க்காக அதுல் குல்கர்னியிடம் உதவி கேட்பது போல சென்று பின் அவருக்கே ஆஃபர் கொடுக்கும் காட்சியில் ராஜசேகர் நடிப்பில் அசத்தி விட்டார்.

மீண்டும் ரேஸில் பங்கு பெற வரும் மகன் அதற்காக இன்னும் மனதளவில் தயாராகவில்லை என்று கூறும் காட்சி பின் இப்போது அவன் தயாராகி விட்டான் என்று கூறும் காட்சி மற்றும் இறுதிக் காட்சி என ராஜசேகரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.

அனன்யாவாக மாளவிகா காதல் காட்சிகளை விட எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.

கார்ப்பரேட் வில்லனாக நடித்த அதுல் குல்கர்னி வழக்கம் போல நடித்திருக்கிறார். ராஜசேகரின் உதவியாளராக நடித்தவர், சர்வானந்தின் மகன் சர்வானந்திற்கு உதவுபவர் மற்றும் படத்தில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அருமையாக செய்து படம் சுவாரஸ்யமாக செல்ல பெரிதும் உதவி செய்துள்ளனர்.

ஜிப்ரான் தான் படத்தின் மற்றொரு நாயகனாக இருக்கிறார். பின்னணி இசை படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது. பாடல்கள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவாளர் காட்சிகளை சிறப்பாக படமாக்கி நம் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். ரேஸ் காட்சிகளில் அவரது கடும் உழைப்பு கண் கூடாக தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சி எக்ஸெலன்ட்.

பயங்கிறது தோல்விக்கான காரணம் அல்ல அதே பயத்தை வெற்றிக்கான ஆயுதமாகவும் பயன் படுத்திக் கொள்ளலாம் நீ முன்னாடி வரல எல்லோரும் உன் பின்னாடி வந்தாங்க ரெண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் அபிலாஷ் ரெட்டி ஸ்போர்ட்ஸ் கதைக்களத்தில் அமைந்த படத்தில் பெரிதாக காட்டப்படாத Motocross பைக் ரேஸ்ஸை திரையில் அற்புதமாக காட்டி இருக்கிறார்.

வழக்கம் போல நாயகன் தோற்று மீண்டும் களத்திற்கு வந்து வெற்றி பெற முயற்சி செய்வது போன்று இருந்தாலும் நேர்த்தியான திரைக்கதையால் படம் விறுவிறுப்பாக செல்கிறது.

Block pass வரும் இடம் Mountain Jump காட்சிகள் செம்ம. சென்டிமென்ட்டான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை பாதிக்காத வகையில் இயக்கிய விதம் அருமை.

மொத்தத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லாமல் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் இந்த படத்தை அனைவரும் காணலாம்.

படத்தை காண விருப்பமுள்ளவர்கள்

Netflix OTT ல் பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top