இஸ்லாமியர் என்றால் தமிழ் திரைப்படங்களில் தீவிரவாதியாக மட்டுமே காட்டப்பட்டு வரும் இந்த காலங்களில் இவ்வளவு காலங்களில் முதல் முறையாக திரு. மீரா கதிரவன் அவர்களை படைப்பான இந்த திரைப்படத்தில் கைத்தறி நெய்பவர்களின் வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையை கேண்டிட் கேமரா வைத்து படம் பிடித்தது போலவே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்..
சிறு பையனாக இருந்தவரை மீசை தாடி ஒட்டி பெரியவனாகாமல் இயல்பாகவே அவன் வயதை கூட்டி காத்திருந்து படம் பிடித்து இருப்பது இந்த படம் எவ்வளவு நாட்கள் தயாரிப்பில் இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.
இந்த கால நேரங்களில் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு தனக்கு தேவையான அனைத்தையும் கையகப்படுத்திக் கொண்டு மிகச் சிறப்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர்களை தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களை பயிற்சி கொடுத்திருப்பார் தனக்கு ஏற்றார் போல் மாற்றி அவர்களை தன் இயல்புக்கு கொண்டு வருவதற்காக அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கிட்டத்தட்ட நடிகர் அத்தனை பேரையும் இஸ்லாமியர்களாகவே மாற்றி இருக்கிறார் நன்றாக புரிகிறது
தொடர்ந்து அந்த சிறந்த முகங்களை தனது திரைப்படங்களில் வாய்ப்பு அளிப்பார் என்றும் நம்புகிறேன். அற்புதமான படைப்பு கொஞ்சம் காலம் போனாலும் பரவாயில்லை என்பதை மீரா கதிரவன் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்..
கிட்டத்தட்ட மூன்று காலகட்ட திரைப்படமான இதில் அனைவரின் உடல் மொழி அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள் என்னைப் பொறுத்தவரையில் அனைத்து கதாபாத்திரங்களும் இஸ்லாமியர்களாகவே தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்வி கூட தோன்றுகிறது..
சித்தி கேரக்டர் செய்திருப்பவர் மிகச் சிறப்பாக செய்திருந்தார். கஸ்தூரிராஜா அவரது மனைவி மிகப் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள். பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்பதால் அனைவருக்கும் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கிறது. காலத்தால் அழியாத ஒரு இஸ்லாமிய திரைப்படத்தை கொடுக்க மீரா கதிரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
