Nayakan

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்!

6 / 100 SEO Score

கலைஞானி கமலஹாசன் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெளியீட்டின் போது தோல்வி அடைந்து, பிற்காலத்தில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படிப்பட்ட சில திரைப்படங்கள்

நாயகன் (1987)

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், போட்டி படமாக வந்த மனிதன் வணிகரீதியாக வென்றது.

பேசும் படம் (1987)

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது.

குணா (1991)

கமல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், போட்டி படமாக வந்த தளபதி வணிக ரீதியாக வென்றது.

மகாநதி (1994)

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

போட்டி படமாக வந்த சேதுபதி IPS வணிகரீதியாக வென்றது.

சதிலீலாவதி (1995)

கமல் மற்றும் கோவை சரளாவின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது.

போட்டி படமாக வந்த பாட்ஷா வணிகரீதியாக வென்றது.

குருதிப்புனல் (1995)

கமலின் நடிப்பு மற்றும் திரைக்கதை ஆங்கில பட ஸ்டைலில் நன்றாக இருக்கும். ஆனால், பாடல்கள் இல்லாதது மற்றும் ஜனரஞ்சகமாக இல்லாதலால் படம் சரியாக போகவில்லை .

மேலும், போட்டி படமாக வந்த முத்து வணிகரீதியாக வென்றது.

ஹே ராம் (2000)

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவிலிருந்து ஆஸ்கார் நாமினேஷன்க்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட கடைசி தமிழ் திரைப்படமாகும் என்ற போதிலும் வணிகரீதியாக தோல்வி அடைந்தது.

ஆளவந்தான் (2001)

அதிக பட்ஜெட், இரு வேடத்தில் கமல் ஹாசன்

சைக்கோ மொட்டை கமல் ஹாசனின் நடிப்பு வெகுவாக பாராட்டினர் விமர்சர்கள்.

இடையிடையே வரும் கிராபிக்ஷால் ரசிகர்கள் புரியாமல் வெறுப்படைந்தனர்.

2001 தீபாவளிக்கு நந்தா, ஷாஜகான் போன்ற படங்களோடு போட்டி போட்டு அதிக திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வி அடைந்தது.

டரான்டினோவின் பிரபலமான கில் பில் பட காட்சி ஆளவந்தானின் பார்த்து இன்ஸ்பியர் ஆகி அந்த காட்சியை எடுத்தார் டரான்டினோ.

அன்பே சிவம் (2003)

இன்று தொலைக்காட்சிகளில் மற்றும் யூடியூபில் படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் சிலாகித்து எழுதி தள்ளுகின்றனர்.

வெளியான சமயத்தில் மக்களும் பொதுப்படையான ரசிகர்களும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

இதனோடு போட்டி படமாக வந்த விக்ரமின் தூள் படம் A, B, C, அத்தனை சென்டர்களிலும் தூள் கிளப்பியது.

அன்பே சிவம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது.

விருமாண்டி (2004)

படத்தின் கதைக்கரு மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து படத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், சாதி அரசியல், மரணதண்டனை போன்ற விவாதப் பொருட்களால் இப்படம் அரசியல் ரீதியாக நிறைய விமர்சனங்களை சந்தித்தது.

இப்படத்தின் பெயர் சண்டியர் என விளம்பரங்கள் வெளிவந்தன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இப்படம் சாதியின் பெயரால் எடுக்கப்படுகிறது, இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாகும் எனக்கூறினார்.

இதனால் தேனி மாவட்டத்தில் இப்படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு தமிழக முதல்வரை கமலஹாசன் நேரடியாக சந்தித்து விளக்கம் கொடுத்தார். இப்படம் கமலின் சொந்த தயாரிப்பு ஆகும். இளையராஜாவின் இசையில் இப்படப் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. ஆனால், படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top