குஷி

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், 2000ஆம் ஆண்டு விஜய் – ஜோதிகா ஜோடியாக வெளியான குஷி படம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்க வருகிறது.

எஸ். ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில், விஜய் மற்றும் ஜோதிகா மட்டுமல்லாமல் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் – கட்டிப்புடி கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது போன்றவை வெளியான காலத்திலேயே சூப்பர் ஹிட்டானவை.

2000 மே 19 அன்று வெளியான குஷி, 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, விஜய்யின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

இப்போது, அந்த வெற்றிப் படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top