தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52வது படமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது:
“பொதுவாக நாயகனின் பெயரை வைத்து படங்களுக்கு டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால் நான் என் சின்ன வயது அனுபவங்களையும், நான் சந்தித்த நிஜ மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதிலிருந்து இட்லி கடை உருவானது.
என் சின்ன வயதில் பூக்களைப் பறித்து அதில் கிடைத்த காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி, இன்று எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை. நம்முடைய வேர்களையும் வரலாறையும் ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதே இந்தப் படத்தின் மையக்கருத்து.
என்னை திரையில் பார்த்து மகிழுங்கள்; ஆனால் திரையரங்குக்கு வெளியே உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்,” என தனுஷ் தெரிவித்தார்.
