அபிராமி

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த போது, அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டர் பகிர்ந்துள்ளார். போஸ்டரில் ‘திராவிட வெற்றி கழகம்’ என்ற கட்சி தொடங்கியது போலவும், அவர் பொதுமக்களை சந்தித்து புகைப்படம் எடுக்கிற போல் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இதனால், அபிராமி உண்மையில் புதிய கட்சியைத் தொடங்கியாரா? அல்லது இது அவருடைய புதிய படத்தின் போஸ்டரே? என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top