ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘Adolescence’ நெட்பிளிக்ஸ் தொடர் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 மில்லியன் பார்வைகளைப் பதிவு செய்த இந்த தொடர், ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் சிறப்பாகும்.
லண்டனில் நடக்கும் கதையமைப்பில், பள்ளி மாணவியின் கொலைக்குச் சந்தேக நபராக கைது செய்யப்படும் ஜேமி என்ற பாத்திரத்தில் 15 வயது இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார். அந்த வேடத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவருக்கு சிறந்த துணை நடிகர் விருதைத் தேடித்தந்தது. இதன் மூலம், எம்மி வரலாற்றிலேயே அந்த பிரிவில் விருது வென்ற மிக இளம் நடிகராக ஓவன் கூப்பர் புதிய சாதனை படைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் என்னவோ, தொலைக்காட்சி உலகுக்கு அதே உயர்வில் திகழ்வதே எம்மி விருதுகள். இந்த ஆண்டின் விழாவில் ‘Adolescence’ பல பிரிவுகளில் விருதுகளை அள்ளியது. அவை:
சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்), சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) இவ்வாறு, 2025 எம்மி விருதுகளை பெருமையுடன் கைப்பற்றிய ‘Adolescence’, ஆண்டின் மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாக முத்திரை பதித்துள்ளது.
