எங்கள் தங்கம்

தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம்

10 / 100 SEO Score

மா இன்டி பங்காரம்

தமிழில் “எங்கள் தங்கம்”

சமந்தா தயாரித்து நடித்து தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

வழக்கமான பாட்ஷா, மாணிக்கம் கதை தான். காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரது கணவருடன் மாமனார் வீட்டுக்கு வருகிறார். மாமனார் வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் எடுக்க போராடுகிறார். ஆனால் அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அது என்ன என்பதை காமெடி + ஆக்க்ஷனுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக சமந்தா. சண்டையெல்லாம் நன்றாக போடுகிறார், புடவை கட்டிக்கொண்டு பறந்து பறந்து அடிக்கிறார். சண்டைக்காட்சிகள் நம்பும்படி எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஏம்மா சமந்தா, இம்புட்டு ஒல்லியாவா இருக்கறது. கொஞ்சமாவது சதை போட்ருக்கலாம். என்ன தான் சண்டைக்காட்சி நல்லாருந்தாலும், லேசா சிரிப்பு தான் வருது.

ஆனால் பட ப்ரோமோஷனில் சமந்தா ஜொலித்தது உண்மை. தாய்மையின் பூரிப்பு.

சமந்தாவை தாண்டி படத்தில் ஸ்கொர் செய்வது குல்ஷன் தேவய்யா. மனிதர் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷனில் வெறி ஏற்றுகிறார்.

சின்ன மருமகளாக வரும் ஸ்ரீமுகியும், சமந்தாவின் தோழியாக வரும் மஞ்சுஷாவும் கவனம் ஈர்க்கிறார்கள்.

மற்றபடி ஒன் & ஒன்லி சமந்தா மட்டும் தான்.

பாட்ஷா மாணிக்கம் கதையை காப்பாற்றுவது பிளாஷ்பேக் காட்சிகள் தான் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆனால் பின்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள். எந்த வித அழுத்தமும் இல்லாமல் கடந்து செல்கிறது பிளாஷ்பேக்.

ஆனாலும் படம் ஓகே. போரடிக்காமல் செல்கிறது.

இயக்குனர் நந்தினி ரெட்டி ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து ஒ பேபி படத்தை கொடுத்தவர் தான். இந்த படத்தில் சொல்லி அடித்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு ஹீரோ நம்ம சந்தோஷ் நாராயணன். மனிதர் பட்டையை கிளப்பியிருக்கிறார். பின்னணி இசை மூலமாக படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வதும் சந்தோஷ் தான். ட்ரைலர் வந்த பொழுதே சந்தோஷின் இசை கவனிக்கப்பட்டது.

மா இண்டி பங்காரம் – ஜியோ ஹாட்ஸ்டாரில்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top