தமிழ் சினிமாவில் விரைவாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவானது.
பின்னர் கவின், ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் புகழைப் பெற்றார். அந்த நிகழ்ச்சியே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
பிக்பாஸுக்குப் பிறகு அவர் நடித்த ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் விஷ்ணு எடவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வயதில் இளையவன், தன்னைவிட மூத்த பெண்ணை காதலிக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் – நயன்தாரா இணையும் இந்த புதிய படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் அந்த தருணத்தைக் காத்திருக்கிறார்கள்.
