சமூக வலைத்தளமான X-ல் (ட்விட்டரில்) ‘காந்தாரா’ திரைப்படத்தின் நெருப்பு மத்தியில் தோன்றும் தெய்வீக உருவ காட்சி மற்றும் அதனை மேலும் உயர்த்திய அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு நிமிடம்…!
அதே மாதிரியான பக்தி-பயம் கலந்த தெய்வீக அனுபவத்தை நம்ம செல்வராகவன் சார், ஏற்கனவே 2009-ஆம் ஆண்டிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கச்சிதமாக சித்தரித்திருந்தாரே!
நடராஜரின் நிழல் விழும் அந்த மறக்க முடியாத காட்சி நினைவிருக்கிறதா? அந்த தருணத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோரின் பரவசமான நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் மிருதங்கம், நாகச்வரம், வயலின் கலந்து ஒலிக்கும் அந்த தெய்வீக பின்னணி இசையும் — பார்ப்பவரை மற்றொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.
செல்வா சார், நீங்க உண்மையிலேயே ஒரு மேதை! உங்களுக்கு பிடித்த அந்த ‘பரவச’ காட்சி எது? அல்லது, சிறந்த VFX, பின்னணி இசையுடன் உங்களை வியக்க வைத்த வேறு தமிழ்த் திரைப்படம் எது?
