dude

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்!

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘ட்யூட்’. இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் சிங்கிள் ‘ஊரும் பிளட்’ மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘நல்லாரு போ’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம், வரும் அக்டோபர் 17ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘சிங்காரி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top