23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்!
இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!! அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும், […]
