thaai kizhavi box office update 01

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி

10 / 100 SEO Score

தாய் கிழவி கொஞ்சம் பில்ட் அப் அதிகம் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க ரொம்பவே யோசிப்பேன். இந்தப் படம் எனக்குப் பிடிக்காதோ என்ற ஒரு பயம் இருந்தது. இத்தனைக்கும் நான் ராதிகாவின் பரம ஃபேன்.

நடிப்பிற்கு மட்டுமன்றி, தனிப்பட்ட அவரின் தைரியமான பேட்டிகள் மற்றும் ஸ்பீச்களுக்கும் நான் ரசிகை. ஃபெமினிஸ்ட் அல்ல அதே சமயம் பெண்கள் தங்களின் உயர்வுகளை உணர வேண்டும் என்று நினைப்பவர்.

ஓ டி டி யில் இந்தப் படம் எட்டிப்பார்த்தபோது, பார்க்கத்தான் பார்ப்போமே என்று ஒரு சின்ன ஆசை முதல் பத்து நிமிடங்களில் அந்த மேஜிக் நிகழ்ந்தது. பார்க்கப் பார்க்க கொஞ்ச நேரத்தில்.. நாக்கு ஒட்டிக்கொள்ளும் அளவு தாகம் எடுத்தபோதும் எழுந்து போய்த் தண்ணீர் குடிக்க மனம் வராமல் பார்த்துக்கொண்டே…

பரபரவென்று ஓடிய படத்தில் ஒரு பக்கம் ராதிகா மேம் முதல் பகுதிக்குப் பிறகு காணோம் என்ற குறையே தெரியாமல் போகிறது.
ஆரம்பம் மற்றும் கடைசிப் பகுதியில் அவர் கொடுத்த பெர்ஃபாமென்ஸை வைத்தே பெரு நிறைவு கொடுத்துவிடுகிறார்.

ஒரு மெஸேஜை எவ்வாறு சுவாரஸ்யமாய்க் கொடுக்க வேண்டும் என்று துல்லியமாய், ஃப்ரேமுக்கு ஃப்ரேம் உணர்ந்திருக்கும் சிவகுமார் முருகேசனின் அறிமுகப் படம் இதுவாம். ஜமாய்க்கிறார் (டைரக்ஷனில் ராதிகாவின் பங்கு இருக்கும் என்றாலும்) சம்பவங்கள் நிறைந்த படம்.

இந்த நிமிடம் சண்டை போட்டு மறுநிமிடம் சேர்ந்து கொள்ளும் நம் குடும்பத்தை இந்தப் படத்தில் பார்க்கிறோம். அருமையான எமோஷனல் காட்சிகள், பிரம்ம்மாதமான நகைச்சுவை, நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்கள், ஓரளவு ஊகித்தாலும் மிக சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்ட இறுதிக் காட்சி என்று அனைத்திற்கும் தனித்தனியாக நிறைய மார்க் கொடுக்கலாம்.

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? படம் முடிந்த பிறகு தன்னிச்சையாய்க் கைதட்டினேன் என்பதைப் பிறகுதான் உணர்ந்தேன். முனீஸ்கான் தனக்கு ஏன் கல்யாணம் வேண்டும் என்று சொல்லும்போது தன்னிச்சையாய் நெகிழ்கிறோம்.

கடைசி சில காட்சிகள் அல்ட்டிமேட். காரக்டரைஸேஷன் என்பது பற்றியும், சம்பவங்களையும், திருப்பங்கள் மற்றும் இயல்பான சஸ்பென்ஸ் பற்றியும் நிறைய டிஸ்கஸ் செய்து சரியாகத் தீர்மாகித்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் செதுக்கிச் செதுக்கிச் செய்த சிற்பத்தைப் பார்க்கும்போது ஏற்படும் ‘வாவ்’ இதில் ஏற்படுகிறது. சின்னஞ்சிறு சம்பவங்கள் செம்ம. ‘2 இட்லி’ என்ற கேரக்டர் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும்போது, ‘சிகரெட் பிடிக்குறியா?’ என்று கேட்டதை வேறுமாதிரிப் புரிந்துகொண்டு..

தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து, ஒரு டப்பாவுக்குள்ள பத்திரமாய் வைத்துக்கொள்வார். (அந்த டப்பாவுக்குள்ள இதுபோல் நிறைய சிகரெட் இருக்கும்).

ராதிகாவின் காரக்டர் மட்டுமின்றி படம் முழுக்க சுவாரஸ்யமான கேரக்டர்ஸ்தான். நாம் அந்த கிராமத்தில் குடியேறிவிடுகிறோம்.
கருப்பசாமியிடம் ‘இப்படியே பண்ணிட்டு இருந்தா, நான் பாட்டுக்கு சாய் பாபாவை கும்பிட போய்டுவேன்’ என்று சொல்லும் அந்தக் காவல் காரனின் வசனத்துக்கு பக்கென்று சிரித்துவிடுகிறோம். இது போன்ற பக்- படத்தில் ஏராளம்.

‘தலைவர் 170 படம் நடிச்சிருக்காரு.. என்னமோ, அப்பாஸ் படம் பாட்டை தேடுற மாதிரி தேடிட்டு இருக்க?’ கமல் ரசிகரின் பாத்திரப்படைப்பு சூப்பர். இளவரசு காரக்டர் யம்மாடி. ரேச்சலை சாதாரணமாகவே பிடிக்கும். இதில் இன்னும் அதிகமாக…

“நான் ஜவ(ஹ)ர்லால் நேரு பேசறேன்” என்று தந்தை சொல்ல, “நான் ராஜீவ் காந்தி பேசறேன்” என்று மறுமுனையில் சொல்ல .. எதிரில் உள்ளவர்கள் குழம்புவது வேறு ரக நகைச்சுவை.

இன்னொரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அந்தப் பாத்திரம் எந்தக் காட்சியில் எப்படி நடந்து கொள்ளுமோ (நடந்து கொள்ள வேண்டுமோ) அதை பக்காவாக முழுவதும் மெயின்டெயின் செய்கிறார்கள். (ரெண்டு இட்லி காரக்டர் ஹோட்டலில் இருக்கும் காட்சியில் அவர் முன்னால் தட்டில் ரெண்டு இட்லி)
நடுரோடில் ஆம்புலன்ஸ் நிற்க..

யாரோ ஒரு பெண்மணி இறக்கும் சம்பவம் சோகக் கவிதையாய் அருமையாய் எடுத்திருக்கிறார்கள். வசனங்கள் செம்ம. குறிப்பாக ராதிகாவின் வசனங்கள். ஆரம்பக் காட்சியிலேயே எந்த ஊர்த் துடைப்பத்தில் எந்தக் குஞ்சலம் என்று அடுக்கும் இடமே செம்ம.

ஆரம்பம், நடு , முடிவு, கிளைமாக்ஸ், சஸ்பென்ஸ், வசனம், பாத்திரப்படைப்பு, நடிப்பு என்று எதிலுமே சோடை போகாத படம். அப்புறம்.. அந்த மேக் அப்.. சொல்ல என்ன இருக்கு? பொம்பளை கமல்+ பொம்பளை சிவாஜி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top