‘இட்லி கடை’ படத்தின் RUNTUNE தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய படம் தான் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.
பவர்புல்லான வில்லன் ரோலில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் RUNTIME : 2 hrs 27 mins என்று தகவல் வெளியாகியுள்ளது.
