தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் அனுபமா, சமீபத்தில் நடித்த ‘கிஷ்கிந்தாபுரி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரமுடன் ‘பைசன்’ படத்தில் நடித்திருக்கும் அவர், வரும் 17-ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து உற்சாகமாக உள்ளார்.
ஒரு நேர்காணலில் தனது பள்ளி காலத்தை நினைவுகூர்ந்த அவர் கூறியதாவது:
“சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என் பள்ளியில் டாப்பர் மாணவர்களுக்குத்தான் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காரணம் – நல்லா படிப்பவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ண முடியும் என்பதுதான்.
அந்த எண்ணம் என்னுள் ஆழமாக பதிந்தது. நான் டாப்பர் இல்லாததால் நடிகை ஆக முடியாது என்று பயந்தேன். அதனாலே என் கனவை ஓரங்கட்டி வைத்தேன். ஆனால் பிறகு படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லையென்று உணர்ந்தேன்,” என்றார் அனுபமா.
