கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நெரிசல் திட்டமிட்ட சதியின் விளைவு எனக் கூறி, தவெக கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் – விஜய் வெளியிட்ட வீடியோ#Vijay | #TVK | #Campaign | #TVKLeader | #தமிழகவெற்றிக்கழகம் | #KarurTragedy | #cinemakeeda pic.twitter.com/90QKtMvwGV
— cinema keeda (@cinema_keeda) September 30, 2025
இந்தச் சூழ்நிலையில், கரூர் பேரதிர்ச்சி குறித்து விஜய் முதல்முறையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் (X page) ஒரு வீடியோவை வெளியிட்டு, தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
