நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இப்போது தமிழில் ஒளிபரப்பாகும் சீசன் 9 புதிய அம்சங்களுடன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அவர்களே அழைத்து, பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
இந்த முறை 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, பல்வேறு டாஸ்க்குகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், ‘ரட்சகன்’, ‘ஜோடி’, ‘நட்சத்திரம்’, ‘துள்ளல்’ போன்ற படங்களை இயக்கிய பிரவீன் காந்தி போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக பிரவீன் காந்தி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
கடந்த சீசனில் சர்ச்சையுடன் பேசி கவனம் பெற்ற ரஞ்சித், வீட்டுக்குள் நிதானமாக விளையாடினார். அதேபோல இம்முறை பிரவீன் காந்தி அடக்கி வாசிப்பாரா அல்லது அடித்து விளையாடுவாரா என்ற கேள்வியில் நெட்டிசன்கள் தற்போது கிண்டலடித்து வருகிறார்கள்.
