நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருவதோடு, தமிழில் இம்முறை 9வது சீசனாக தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அழைத்து, பிரம்மாண்டமான வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ‘அகோரி’ கலையரசன் போட்டியாளராக அறிமுகமானார்.
போடி புதுக்காலனியில் உள்ள அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த கலையரசன், அங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறினார். பின்னர் காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்று ‘அகோரி’ சாமியாராக ஆனார்.
கலையரசனுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் அவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு இணையத்தில் பேசுபொருளாக இருந்த நிலையில், இப்போது அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
