முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சமூக வலைதளத்தில் விமர்சன பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவை அவரது மகன் இன்பன் உதயநிதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததுடன், பின்னணியில் அனேகன் திரைப்படத்தின் டங்கமாரி ஊதாரி பாடலின் சில வரிகளையும் இணைத்திருந்தார். அந்த பாடல் வரிகள் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசியல் விமர்சனங்களுக்கு பதிலாக தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சில நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்பன் உதயநிதி பகிர்ந்த ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறையும் வகையிலான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
