சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது

‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வடசென்னைப் பகுதியில் நடக்கும் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்டு உருவாகும் இந்த படம், ‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய வேறொரு கதைச்சூழலை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

சிம்பு இத்திரைப்படத்தில் இளமை மற்றும் முதுமை — என இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன், அனிருத் மூவரும் முதல்முறையாக இணைகிறார்கள்.

இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், “அதிர்ச்சி, எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் அளவில் உள்ளது!” என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இந்த ப்ரோமோ நாளை காலை 10.07 மணிக்கு அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்