July 2026

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை!

1991 ல் பாலச்சந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகம். மதுபாலாவின் தோழியாக இரண்டு காட்சிகளில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். எனினும், டைட்டில் கார்டில் ‘அறிமுகம்’ யுவராணி என இவருக்கு ‘பாலச்சந்தரின் அறிமுகம்’ என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 1992 ல் வெளியான ‘புது வருஷம்’ மற்றும் ‘தம்பிக்கு ஊருக்கு புதுசு’, 1993 ல் வெளியான ‘மின்மினிப் பூச்சிகள்’ ஆகிய படங்களிலும் யுவராணிக்கு டைட்டில் கார்டில் அறிமுகம் என்றே வந்தது. இவற்றில் ‘புது வருஷம்’ படத்தில் ‘ரத்னா’ என்றும் , ‘மின்மினிப் […]

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை! Read More »

Exclusive

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்!

94ம் ஆண்டு மதுரையில் ஏதோ திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது முதல் முறையாகப் பார்த்தேன். ஒன்னாப்போ, ரெண்டாப்போ படித்துக் கொண்டிருந்த சமயம். படத்துல மூணே மூணு ஃபைட் தான் என‌ கூட்டிட்டு போன சித்தப்பாவிடம் அங்கலாய்த்து கொண்ட நினைவு. பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது டிவியில் பார்த்தேன். படம் முழுதாக புரியவில்லை என்றாலும் அதன் உயிர்ப்பான, அசலுக்கு நெருக்கமானக் காட்சிகள் ஈர்த்தது. பெரும்பகுதி ப்ளாஸ்டிக்கான சினிமாக்கள் மத்தியில் ஒரு நல்ல படம் போலும் ‘தேவர்

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்! Read More »

Exclusive

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

படத்தில் நடிப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அது கமலின் வழக்கமான வெற்றிப் படங்களில் ஒன்றாகவே இருந்திருக்கும். இப்படி யோசித்துப் பாருங்கள். தேவர் மகன் படத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும்? ரஜினி நன்றாகவே நடித்தாலும், படம் வெற்றி பெற்றாலும், அந்தப் படத்திற்குக் கிடைத்த சிறப்பைப் பெற்றிருக்க முடியாது. அதுபோலத்தான் பாட்ஷா படமும். பாட்ஷா படம் முழுக்கவும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட எந்த நடிகர் நடித்தாலும், அது ரஜினியின் நடிப்பைப் போல வராது. ஆயினும்,

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? Read More »

Exclusive

இதயா நீ காதல் விதையா’ – இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

“இதயம் முரளி” டிரெய்லர் பார்த்த போது உடனே ‘இதயம்’ தான் இதயத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. இதயம் ஒரு ‘ஒரு தலைக்காதல்’ படமென்றாலும் அது தனித்து நின்றது அதன் மேக்கிங்கில் தான். கதிர் ஒரு டிசைனர் என்பதால் காட்சிகளை அழகாக செதுக்கி இருந்தார். படத்தில் முரளி கிராமத்திலிருந்து நகருக்கு டாக்டருக்கு படிக்க வரும் இளைஞன். அது அவருக்கு அழகாக செட்டானது. நாயகி ஒரு படித்த, பெரியவீட்டு நகரப்பெண். ஹீராவின் உயரமும், குதிரைக்கு வாலும், முகத்தில் முன் தொங்கும் முடி

இதயா நீ காதல் விதையா’ – இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் Read More »

Exclusive

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’

தமிழ் திரையிசையில் பாடல் வரிகளை வெறும் கவிதை வரிகளாக மட்டுமல்லாமல், படத்தின் கதாபாத்திரங்கள், நடிகர்-நடிகையர், இயக்குநர், கூடவே தனக்கே உரிய கையொப்பங்களையும் நுணுக்கமாக புகுத்தி விளையாடிய பாடலாசிரியர் என்றால், அந்தப் பட்டியலில் முதன்மையாக நினைவிற்கு வருபவர் கவிஞர் வாலி. வாலியின் பாடல்களை கவனமாகக் கேட்கும்போது, அவை வெறும் இனிமையான சொற்களின் தொடராக மட்டும் இல்லாமல், ஒரு புத்திசாலித்தனமான ‘இன்சைடு ரெஃபரன்ஸ்’ உலகம் என்பதை உணர முடியும். காட்சிக்குத் தேவையான உணர்வை குலைக்காமல், பாடலின் ஓட்டத்தையும் சிதைக்காமல், அதற்குள்

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’ Read More »

Exclusive

காலம் கடந்தும் கிராமப்புறங்களில் கோலோச்சும்…’கண்ணில் ஆடும் ரோஜா’!

சரத்குமாரின் ‘கேப்டன்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. அந்தப் படத்தில், ‘கன்னத்துல வை’, ‘இடுப்பு அடிக்கடி புடிக்குது’, ‘உனக்கு ஒரு மச்சம்’ , ‘கண்ணில் ஆடும் ரோஜா’ என சிற்பி கொடுத்த அத்தனை மெட்டுகளுமே ஹிட் ரகங்கள். இவற்றில் ‘கன்னுத்துல வை’ இன்றளவும் டவுன் பஸ்களில் தவிர்க்க முடியாத பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மெட்டு. கேட்டதும் ஈர்க்கக்கூடிய வெகுஜன சுவார்ஸ்யக் கூறுகளை ,அந்தப் பாடல் தாராளமாகக் கொண்டிருப்பதே காலம் கடந்தும் கிராமப்புறங்களில் அந்தப் பாடல் இன்றும்

காலம் கடந்தும் கிராமப்புறங்களில் கோலோச்சும்…’கண்ணில் ஆடும் ரோஜா’! Read More »

Exclusive

‘பூ பூ பூ பூத்த சோலை’ கண்களை குத்தகை எடுத்துக் கொள்ளும் அழகு அது!

1991 ல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த அனைத்து பாடல்களும் சிறப்பானவை. கிராமிய கதைக்களம் என்றால் ராஜாவிற்கு மண்வாசத்துடனான மெட்டுகள் அருவி மாதிரி கொட்டும், அதுவும் பாரதிராஜாவின் படங்களில் அது பேரருவி அவதாரம் எடுத்துவிடும். ‘பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி’, ‘சிட்டாஞ் சிட்டாங்குருவி’, ‘கருத்த மச்சான்’ , ‘ஏ மரிக்கொழுந்து’ என மண் மணக்க ஒவ்வொரு மெட்டும் தனித்து சிலாகிக்கப்பட வேண்டிய ரகம். இவை

‘பூ பூ பூ பூத்த சோலை’ கண்களை குத்தகை எடுத்துக் கொள்ளும் அழகு அது! Read More »

Exclusive

மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் ’கெட்டியோளானு எண்டே மலாக்கா’, (kettiyolaanu ente malakha) 2019!

ஆசிஃப் அலியை ’சால்ட் அண்ட் பெப்பர்’, ’ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா’ தொடங்கி ’உயரே’ வரை சாக்லெட் பாய் அல்லது மூன்று ஹீரோக்களில் ஒருவர் மாதிரியான கதாபாத்திரங்களிலேயே பார்த்துவிட்டு, முதன்மை நாயகனாக முதன் முறை இந்தப் படத்தில் பார்த்த போது ஆச்சர்யப்படுத்தி இருந்தார். ஃபீல் குட் வகையில் அமைந்த அழகான குடும்பச் சித்திரம் இந்தப் படம். படத்தின் கரு திருமணத்திற்குத் ஆயத்தமாகும் ஆண்கள், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறித்தானது. அதிகம் விவாதிக்கப்படாத சமூகப் பிரச்சனையும்கூட.

மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் ’கெட்டியோளானு எண்டே மலாக்கா’, (kettiyolaanu ente malakha) 2019! Read More »

Exclusive

திரையிசைப் பாடல்களில் பழமொழிகளின் பாவிப்பு – கண்ணதாசன் முதல் டி.ராஜேந்தர் வரை

தமிழ் திரைப்படப் பாடல்களில் பழமொழிகளும் சொலவடைகளும் பயன்படுத்தப்படும் விதம் எப்போதும் ரசிக்கத்தக்க ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது. தத்துவம், காதல், நகைச்சுவை, சோகம், கேலி, கிண்டல் என எந்த உணர்வை எடுத்துக்கொண்டாலும், அதற்குள் ஒரு பழமொழியையோ சொலவடையையோ நயமாக நுழைத்து பாடலாசிரியர்கள் பாடலுக்கு தனி சுவை சேர்த்திருப்பதை கவனிக்கலாம். உதாரணமாக, பாமா விஜயம் திரைப்படத்தின் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் அன்றாட வாழ்க்கைச் சிக்கலை நகைச்சுவைத் தொனியில் சொல்வதற்காக பழமொழி நயமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்வே மாயம்

திரையிசைப் பாடல்களில் பழமொழிகளின் பாவிப்பு – கண்ணதாசன் முதல் டி.ராஜேந்தர் வரை Read More »

Exclusive

மணிரத்தினத்துக்கு ஒரு அரவிந்த்சாமி; பாரதிராஜாவுக்கு ஒரு ராஜா!

பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் முன்னணி நாயகிகளாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் அறிமுகப்படுத்திய கதாநாயகர்களில் கார்த்திக் மட்டுமே பெரிய அளவு நட்சத்திர உயர்வோடு இருந்தார்.. கார்த்திக் அளவு பெரிய அளவில் இல்லாவிடினும் பாரதிராஜாவின் அறிமுகங்களான நிழல்கள் ரவி, பாண்டியன் , நெப்போலியன் உள்ளிட்டவர்களும் ஃபீல்டில் அவர்களுக்கென்று பேர் சொல்லும்படியான ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தனர். பாரதிராஜா தான் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய ராதிகாவை ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கிழக்குச்

மணிரத்தினத்துக்கு ஒரு அரவிந்த்சாமி; பாரதிராஜாவுக்கு ஒரு ராஜா! Read More »

Exclusive
Scroll to Top