எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு
1983 ல் பாக்யராஜ் அவர்கள் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியடைந்த இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தினை, சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்த போதுதான், என்ன மாதிரி ஒரு திரைக்கதை இது என்று வியந்து பார்க்கும் அனுபவப் பார்வை கூடி வந்திருப்பதை உணர முடிந்தது. இந்தப் படம் பேச இருக்கிற விஷயத்தைப் பற்றி முன்னோட்டம் போல, ஒரு வயதான தம்பதியின் அன்பு பரிமாறலைக் காட்டி தொடங்குகிற போதே, தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதையை வாசிப்பது போல ஓர் அனுபவத்தைத் தந்து […]









