Tamil cinema

இரு மாபெரும் இயக்குநர்கள் இணையும் படம்… வெளியான புது அப்டேட்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற ஹிட் கேங்க்ஸ்டர் படங்களின் மூலம் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். சமீபமாகவே, அவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் பரவியது. இப்போது அதற்கான உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்க்ஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]

இரு மாபெரும் இயக்குநர்கள் இணையும் படம்… வெளியான புது அப்டேட் Read More »

Tamil cinema

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி!

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் தனது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சோனி மியூசிக் எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இனையதளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், இது காப்புரிமை சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சோனி

Dude திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் ; வழக்கு தொடர அனுமதி! Read More »

Tamil cinema

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு

நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னைக்கு அருகிலுள்ள தண்டலில் அமைந்த தனியார் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் மகாராஷ்டிராவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்ததாகத் தெரிய வருகிறது. சென்ட்ரல் ரெயில்வே நிலையத்தில்

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு Read More »

Tamil cinema

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப்

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிது ஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான ‘டியூட்’ படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Journey Of Dude…. டியூட் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த பிரதீப் Read More »

Tamil cinema

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது

‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னைப் பகுதியில் நடக்கும் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்டு உருவாகும் இந்த படம், ‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய வேறொரு கதைச்சூழலை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சிம்பு இத்திரைப்படத்தில் இளமை மற்றும் முதுமை —

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது Read More »

Tamil cinema

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்!

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் குறித்த வலியமான செய்தியை சமூகத்தில் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்! Read More »

Tamil cinema

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில்

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை உறைக்கச் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ள ‘பைசன்’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதி மோதல்களும், தீண்டாமை பிரச்சனைகளும் பின்னணியாகக் கொண்டு, கபடி வீரரின்

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில் Read More »

Tamil cinema

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் சிறப்பாக ஓடியது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார். முதலில், அந்த இணைப்பு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் கூறியதன்படி — “கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது, திட்டமும் உள்ளது.

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா? Read More »

Tamil cinema

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில்

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்! Read More »

Tamil cinema

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,“அஜித் ஒரு

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன் Read More »

Tamil cinema
Scroll to Top